1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (04:02 IST)

'அந்த' நேரத்தில் பெண்கள் கோவில், மசூதி, சர்ச்சுக்கு போகக்கூடாது. கேரள காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா தலைவர்கள் தான் அவ்வப்போது பெண்கள்  குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வாங்கி கட்டிக்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி பெண்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார்



 


கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ;, “மாதவிடாய் தூய்மையற்ற நிலை. எனவே, மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது. இந்த கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் நோன்பு இருப்பதில்லை. பெண்களின் உடல் தூய்மையற்று இருப்பதால் கோவில், மசூதி அல்லது சர்ச் என வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்று கூறினார்.

மாதவிடாய் என்பது தீட்டு அல்ல, மாதம் ஒருமுறை நிகழும் சாதாரண நிகழ்வு என பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பரவியுள்ள இந்த காலத்தில் சுதீரன் பத்தாம்பசலித்தனமாக கூறிய கருத்துக்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.