1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:26 IST)

மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடா? மோகன் பாகவத் கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்

pinarayi
மதரீதியிலான மக்கள் தொகை கட்டுப்பாடு என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கு கேரள முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
தசரா பண்டிகையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அனைத்து மதத்தினரும் சமமாக பொருந்தும் வகையில் விரிவாக ஆலோசனை நடத்தி மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்
 
இந்த கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்
 
மோகன் பகவத் கருத்து தவறான நோக்கம் கொண்டது என்றும் இத்தகைய பேச்சுக்கள் நாட்டில் வகுப்புவாத வெறுப்புணர்வை கட்டவிழ்த்துவிடும்  என்றும் கூறினார். மேலும் தேர்தல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பேச்சுக்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
 

Edited by siva