கொரோனா பரவல் அதிகரிப்பு: ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஆயிரம் பேர்களுக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வராத பட்சத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்த அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை என்றும் அறிவித்துள்ளது