திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (18:01 IST)

பிரம்ம முகூர்த்தத்தில், போயஸ் தோட்டத்தில் உலா வரும் ஜெயலலிதா ஆத்மா: கேரள ஜோதிடரால் பரபரப்பு!!

மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா தன்னுடன் 3 மாதங்களாக பேசி வருகிறார் என கேரள ஜோதிடர் வேங்கட சர்மா கூறியுள்ளார்.


 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழக அரசியல் கேலி கூத்தாக மாறியுள்ளது. மேலும், அவரது மரணத்தில் மர்மம் விலகாமல் இருப்பதால் மக்கள் உண்மை எதுவென குழப்பத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த ஜோதிடர் வேங்கட சர்மா இது பற்றிய பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஜெயலலிதா இயற்கை மரணம் அடையவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் நான் கடந்த 3 மாதங்களாக பேசி வருகிறேன். 
 
ஜெயலலிதா இறந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா இருப்பார். 30 பேர் வரை பழிவாங்க அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.