திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:44 IST)

சட்டையை கிழித்து எம்.பி. ஆர்ப்பாட்டம்.. காஷ்மீருக்கான அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, காஷ்மீர் எம்.பி. ஒருவர் சட்டையை கிழித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சட்டப்பிரிவு 370 கீழ் விதி 35 A அந்தஸ்தை ரத்து செய்ய இன்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காஷ்மீருக்கான அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டனர்.

உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் வகையில் சபாநாயகர் வெங்கையா நாயுடு, அவையை சற்று நேரம் ஒதுக்கிவைத்தார். இதன் பின்னர் அவை மீண்டும் கூடியபோது, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான நசீர் அகமது லவாய் மற்றும் எம்.எம்.பயாஸ் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கிழிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் சபாநாயகர் வெளியேற்றினார்.

அப்போது, அவர்களில் ஒருவர் திடீரென தனது சட்டையை கிழித்துகொண்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டார். பின்பு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.