திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (16:19 IST)

பல்டி அடிக்க முயன்று கழுத்து உடைந்த இளைஞர் – டிக் டாக் வீடியோவால் வந்த வினை

கர்நாடக மாநிலத்தில் பல்டி அடித்து அதை வீடியோ எடுத்து டிக் டாக்கில் போட ஆசைப்பட்ட நபர் கழுத்து உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கிடக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் துங்ரூ பகுதியை சேர்ந்தவர் குமார். கச்சேரிகளில் பாட்டு பாடுபவரான குமார், அவ்வபோது டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிடுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு ”பேக் டைவ்” எனப்படும் தலைகீழாக பல்டி அடிக்கும் ஸ்டண்டை செய்து டிக் டாக்கில் வெளியிட முயற்சித்துள்ளார் குமார். அவர் ஓடி வந்து நண்பரின் கையை மிதித்து உயர்ந்து தலைகீழாக திரும்பியதும் நிலை தடுமாறினார். அப்படியே தலைகீழாக தரையில் விழுந்தவரின் தலை அடிபட்டு கழுத்து எழும்பு முறிந்தது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.