புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (08:59 IST)

சாம்பாரில் கிடந்த பல்லி; மருத்துவமனையில் மாணவர்கள்! – கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் மாணவர்களுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட தொடங்கியுள்ளது.

உடனடியாக சுமார் 80 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் மதிய உணவில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததே மாணவர்கள் உடல்நல குறைவுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அதன்பிறகு மாணவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.