செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (19:25 IST)

கர்நாடகத்தில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது: மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

கர்நாடகத்தில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது: மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் அதுவும் 4 வார காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என்பது தான் தீர்ப்பு.


 
 
இந்த தீர்ப்பினால் தமிழகம் மகிழ்ச்சி அடைந்தாலும், கர்நாடகத்தில் நிலமை தலைகீழ்தான். ஏற்கனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு கலவரங்கள் வெடித்தன.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பினால் கர்நாடகத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. மண்டியாவில் முன்னாள் எம்.பி மாதே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடந்து வருகின்றன. மேலும், மைசூரில் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடக்கிறது. குருபூரு சாந்தகுமார் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
தற்போது கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் நாளை இந்த போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வருகின்றன.