1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறப்பு: முக்கிய எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்படும் என கர்நாடக மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எந்தப் பிரிவினரும் எந்தவித போராட்டம் நடத்தக்கூடாது என்றும் அதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
 
144 தடை உத்தரவை மீறி டத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
 
மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன