செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (18:44 IST)

கர்நாடகத்தில் 12 ஆயிரம், பெங்களூரில் மட்டும் 9 ஆயிரம்: தாண்டவமாடும் கொரோனா

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,698  என்றும் பெங்களூரு நகரில் மட்டும் 9,221 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1,148 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 60,148 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,62,967 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,479 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.