வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (14:52 IST)

கபினி அணையில் விரிசல்: பீதியில் மக்கள்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கபினி அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கபினி அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அணையில் தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் அருகில் உள்ள சுற்று சுவர் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.

விரிசலை சரிசெய்ய பொறியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். அணையை சரியாக பராமரிக்காததே விரிசலுக்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அணையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அம்மாநில நீர்பாசனத்துறை அச்சத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மூத்த பொறியாளர் இதுபற்றி கூறுகையில், ''அணைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பொறியாளர்கள் ஆய்வு செய்யப்பட்டது. அணையின் கட்டமைப்பு உறுதிப்பாட்டிற்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அணை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. எனவே அணை அருகே வாழும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.