1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:02 IST)

அதிகரிக்கும் கொரோனா; பெங்களூரில் முழு ஊரடங்கு! – கர்நாடகா அரசு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் பெங்களூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டு வேரியண்டுகளும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக அரசு மாநிலம் முழுவதிலும் இரவு நேர ஊரடங்கை அறிவித்திருந்தது. இந்த இரவு நேர ஊரடங்கை ஜனவரி 21ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள பெங்களூரில் சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் 50 சதவீதம் நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.