திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (10:49 IST)

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது - கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்

மழை பற்றாக்குறையால் தற்போது தமிழகத்திற்கு மழை திறக்க முடியாது என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லை என்றும், அதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
 
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்திற்கு 4 டி.எம்.சி நீரை தர முடியாது என கர்நாடக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மழை பற்றாக்குறையால் தங்களால் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.