வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:31 IST)

இது தற்கொலை... முடிவுக்கு வரும் சட்டமேலவை துணை சபாநாயகர் மர்ம மரணம்?

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடாவின் மரணம் தற்கொலை என கூறப்படுகிறது. 

 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் அவர்களின் தர்மே கவுடா சடலம் கிடந்ததாகவும், சடலத்துடன் கடிதம் ஒன்றையும் மீட்டு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்தது. 
 
ஆனால் இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தர்மே கவுடா கடந்த 15 ஆம் தேதி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் இருக்கையில் அமர மறுத்துவிட்டதால் தர்மே கவுடா அமர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் தர்மே கவுடாவை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தினர் என்றும், இதனால் அன்றைய தினம் கர்நாடக சட்டமேலவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.