ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 ஆகஸ்ட் 2018 (18:38 IST)

மாநில அமைச்சர் ஒன்னும் தாழ்ந்தவர் கிடையாது: நிர்மலா சீதாராமனுக்கு சாட்டையடி

கர்நாடக அமைச்சர் சாரா மகேஷிடம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிலும் குறிப்பாக மாநில அமைச்சர் சொல்வதை மத்திய அமைச்சர் கேட்க வேண்டியிருக்கு என்று நிர்மலா சீதாராமன் கூறியது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா டிவிட் போட்டுள்ளார். அதில், மேடம் நிர்மலா சீதாராமன், பல வாரங்களாக எங்களது அமைச்சர்கள் குடகில் தங்கியிருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நிவாரண பணிகளை பார்த்து வருகின்றனர். 
 
நீ்ங்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்க வேண்டும். எங்களது சக அமைச்சரை நீங்கள் நடத்திய விதம் பெரும் ஏமாற்றம் தருகிறது. அரசியல்சாசனம்தான் மாநில அரசுகளுக்குரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது, மத்திய அரசு அல்ல. 
 
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரங்களைத்தான் அரசியல்சாசனம் வழங்கியுள்ளது. நாங்கள் ஒன்றும் மத்திய அரசுக்கு தாழ்ந்தவர்கள் இல்லை. இருவரும் பங்காளளர்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.