1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 16 ஜனவரி 2016 (18:57 IST)

கன்னத்தில் அறைந்த கர்நாடகா முதல்வர்: ஊடகங்களில் வெளியாகும் வீடியோ

கர்நாடக முதல்வர் சித்தராமையா பொதுவெளியில் மாநகராட்சி ஆணையர் ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வந்த சித்தராமையா வழிவிடுமாறு எதிரே நின்றவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.


 
 
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மாநகராட்சி ஆணையர் ரமேஷை இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கன்னத்தில் அறையும் காட்சி சேனல்களில் வெளியானது ஆனால் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
 
கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்கனவே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. அரசியல் பிரபலங்கள் மற்றவர்களை கன்னத்தில் அறைவதும், அடிப்பதும், பின்னர் அடிவாங்கியவர்கள் அதை மறுப்பதும் வழக்கமான ஒன்று தானே.