1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (17:12 IST)

காவிக்கொடி ஒருநாள் தேசியக்கொடியாக மாறும்! – பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!

MLA eshwarapa
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரப்பா. சமீபத்தில் ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் சமீபத்தில் இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தேசிய கொடி குறித்து பேசிய அவர் “அரசியல் சாசனப்படி மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக உள்ளது. அதனால் அதற்கு உரிய மரியாதையை அளிக்கிறோம். ஆனால் காவிக்கொடி தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவிக்கொடி எதிர்காலத்தில் தேசிய கொடியாகும் என்பதில் சந்தேகமில்லை” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.