செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:19 IST)

நான் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்: கங்கனா ரனாவத்

நான் அரசியலுக்கு வர சரியான நேரம் இதுதான் என்றும் எனக்கு மக்கள் செய்த உதவிக்கு நான் திருப்பி உதவி செய்ய சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. 
 
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ’இந்த நாடு எனக்கு நிறைய செய்துள்ளது, அதை நான் திருப்பி தர வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது, நான் பலராலும் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், எனவே நான் அரசியலுக்கு வர விரும்பினால் இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே பலமுறை பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் விரைவில் இணைவார் என்றும் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva