1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (14:59 IST)

நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி வெற்றி பெறாது: தலைமை நீதிபதி லோதா

நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சிகள் என்றும் வெற்றி பெறாது என்று தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்திய பார் அசோசியேஷன் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பேசும்போது, ''நீதித்துறை உள்ளார்ந்த வலிமை உள்ளது. அதன் சுதந்திரத்தை பறிக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. ஆனால் சட்டத்தின் பங்கை அதிகரிக்க வேண்டும். நீதித்துறை முற்றிலும் ஊழல் இல்லாதது என உறுதி படுத்த வேண்டும். நீதித்துறை சுதந்திரம் என்றும் வெற்றியடைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.
 
செழித்தோங்கும் ஜனநாயகத்தில் ஊழல் ஒரு மோசமான வடிவில் நோயாக உள்ளது. ஊழலுக்கு எதிராக எந்த உதவியும் நீதித்துறை செய்யக் கூடாது. நீதித்துறை சுதந்திரம் பாராபடசமற்றது. நீதித்துறை சுதந்திரத்தை யாரும் தொட முடியாது என மக்கள புரிந்துவைத்து உள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மக்களுக்கு நம்பிக்கை தருகிறது" என்று பேசினார்.