1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (12:42 IST)

புதிய கட்சியைத் தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய உத்தரவுகள் பிறப்பித்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து தலைமறைவான நீதிபதி கர்ணன் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனைக்குப் பிறகு அவர் 20 டிசம்பர் 2017 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நீதிபதி கர்ணன், 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் களமிறங்க ”ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். தேர்தல் ஆணையத்தில்  விரைவில் கட்சியின் பெயரை பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்தார். நாட்டில் தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவற்றை ஒடுப்பதும் ஊழலை தடுப்பதுமே இக்கட்சியின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.