இந்தியாவை விட்டு வெளியேறு: ஜே.என்.யூ பல்கலையில் கம்யூனிஸ்டுகள் குறித்த வாசகத்தால் பரபரப்பு
இந்தியாவை விட்டு வெளியேறு: ஜே.என்.யூ பல்கலையில் கம்யூனிஸ்டுகள் குறித்த வாசகத்தால் பரபரப்பு
இந்தியாவை விட்டு வெளியேறு என கம்யூனிஸ்டுகள் குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் பல்கலைக் கழக சுவர்களில் எழுதப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரதான வாயிலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன/ குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இந்தியாவை விட்டு வெளியேறு என குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதிய நிலையில் தற்போது அதற்கு பதிலடியாக கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதியதாக கூறப்படுகிறது
இந்த செயலுக்கு ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Edited by Siva