திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 1 ஜனவரி 2020 (14:41 IST)

ஃபிளிப்கார்ட், அமேசானுக்கு ஆப்பு வைக்க களமிறங்கிய ஜியோ மார்ட்??

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட், இந்தியாவின் மும்பை நகரில் துவங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது. இலவச கால், இண்ட்டர்நெட் என வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்த அந்நிறுவனம் தற்போது அனைத்திற்கும் கட்டணங்களை செலுத்தும் வகையில் திட்டங்களை மாற்றியது.

இதனிடையே ஜியோ மோடம், ஃபைபர் என அனைத்திலும் களமிறங்கியது. இதனால் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஃபிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக ஆன்லைன் ஷாப்பிங் சேவையிலும் களமிறங்கியுள்ளது.

இதன் முதல்கட்டமாக இந்தியாவின் மும்பை மற்றும் அதன் சுற்றுப் வட்டார பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. மும்பையை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கூடிய விரைவில் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.