1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (15:28 IST)

ஓய்வெடுத்த தொழிலாளிகளை இரும்பு கம்பியால் தாக்கிய சூப்பர்வைசர்- வீடியோ

தொழிலாளிகள் இருவரை சூப்பர்வைசர் இரும்பு கம்பியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகள் இருவரை அந்த நிறுவன சூப்பர்வைசர் ஒருவர்  இரும்பு கம்பியால் தாக்குகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நேரத்தில் தொழிலாளிகள் ஒய்வெடுத்ததால் அவர்களை தாக்குவதாக தெரிகிறது.

இது குறித்து பெல்லாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேட்டன் கூறுகையில், இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இதனிடையே தொழிலாளர்களை அடித்த சூப்பர்வைசர் ஆகாஷை பணியிடைநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.