வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 1 ஜூன் 2016 (11:44 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு இன்று இறுதிவாதம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு இன்று இறுதிவாதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று இறுதிவாதம் நடைபெறுகிறது.
 

 
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும்  சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்தி தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற உள்ளது.
 
இதற்காக, கர்நாடக அரசு மூத்த வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா இறுதி வாதத்தை முன் வைக்க உள்ளார். இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு வாதம், விடுமுறை கால நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் முன்பு நடைபெறுகிறது.