வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (13:06 IST)

காரியத்தை சாதித்த ஜெகன்; கலைக்கப்படுகிறது ஆந்திர மேல் சபை!!

ஜெகன் மோகன் ரெட்டி ஆளும் ஆந்திர மாநில அமைச்சரவை, மேலவையை கலைக்க இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
 
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் எதிர்கட்சியின் கடும் எதிஎப்புக்கு மத்தியில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களுக்கான மசோதாவை நிரைவேற்றினார். 
 
இதனை தொடர்ந்து 3 தகைநகர மசோதா ஆந்திரா சட்ட சபையில் உள்ள மேல் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆந்திர மேல் சபையில் ஜெகன் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் 3 தலைநகர மசோதா நிறைவேற்றப்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. 
இதனால் ஆந்திர மேல் சபையை கலைக்க ஜெகன் முடிவெடுத்தார். ஆம், சட்டசபையில் நிறைவேற்றி மேல் சபைக்கு அனுப்பப்பட்ட முக்கிய மசோதாக்கள் அனைத்தையும் அங்கு நிராகரிக்கின்றனர். அதோடு மேல் சபைக்காக ஒரு ஆண்டிற்கு 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 
 
ஆனால் இந்த மேல்சபையோ மக்கள் நலத் திட்டங்களை தடுக்கிறது. ஏற்கனவே நிதி பற்றக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த சட்ட மேல் சபை தேவையா? என 27 ஆம் தேதி விவாதம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன் படி இன்று விவாதமும் நடந்தது. 
 
விவாதத்தின் முடிவில் ஆந்திர மாநில அமைச்சரவை, மேலவையை கலைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் சபை கலைக்கப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் அடுத்து 3 தலைநகர் அமலாகும் என தெரிகிறது.