1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:22 IST)

விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள்!

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோளை இஸ்ரோ விண்வெளிக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதுசரை 7 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
 
தற்போது ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ என்ற செயற்கைகோள் பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று இரவு 8.04 மணிக்கு துவங்கியது. 
 
இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ, இந்த நேவிகேஷன் சாட்டிலைட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 
 
பாதுகாப்புத்துறைக்கு உதவும் வகையில், நீர்மூழ்கி, சரக்கு கப்பல்கள், கார்கள், விமானங்கள், வாகனங்கள் அனைத்து வகையான போக்குவரத்தின் இருப்பிடங்கள், பயண நேரம் போன்றவற்றினை ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள் உடனுக்குடன் தெரிவிக்கும்.
 
மேலும் இந்த செயற்கைகோளிலிருந்து பெறும் தகவல்கள் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.