வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:26 IST)

நிலவை அடுத்து வீனஸ் கிரகத்திற்கு விண்கலம்.. முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..!

isro sivan
நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி உள்ள நிலையில் அடுத்ததாக வீனஸ் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் இருப்பதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  நிலவுக்கு விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி உள்ளதை இதை அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் திட்டம் மற்றும் வீனஸ் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் இருக்கிறது.  அதேபோல்  இதை போன்ற பல திட்டங்கள் உருவாக்கும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
 
 ஒரே சிந்தனையிடம் கூடிய நாடுகள் ஒன்றிணைந்து பல நாடுகளுடன் இணைந்து ஆய்வு செய்தால் இன்னும் செலவு குறையும் என்றும் ஆனால் இது  நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை என்றும் சிவன் தெரிவித்தார்.
 
சூரியன், வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அரசாங்கத்திடம் முறையாக இந்த திட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்றும்  இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் உலக அளவில் இந்தியா பெருமை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva