1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (14:25 IST)

விக்ரம் லேண்டர் செயல்படும் வகையில் உள்ளதா? இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியம்

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் என்ற விண்கலம் சந்திரனில் தரையிறங்கவுள்ள கடைசி நிமிடத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் சற்றுமுன் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரில் இருந்து வெளியான புகைப்படத்தின் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
 
இருப்பினும் விக்ரம் லேண்டரிடம் இருந்து இன்னும் தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் உள்ளனர்.
 
 
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் செங்குத்தான நிலையில் விழுந்திருந்தால், ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளது என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நிலவில் லேண்டர் விக்ரம் எங்கிருக்கிறது என்பது துல்லியமாக கண்டுபிடித்து நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், தெர்மல் இமேஜ் முறையில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதேபோன்று இன்னும் ஒருசில புகைப்படங்கள் கிடைத்தால் விக்ரம் லேண்டர் உடனான தகவல் தொடர்பு விரைவில் மீட்டமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் விக்ரம் லேண்டர் எதனால் தகவல் தொடர்பை துண்டித்தது என்பதை கண்டுபிடித்துவிட்டால் அதன்பின் அதனுடன் தகவல் தொடர்பை இணைப்பது எளிதாகிவிடும் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.