மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா?
சிந்து சமவெளி பகுதிகளில் உள்ள வெடிப்புகளும், அணு வெடிப்பில் ஏற்பட்ட வெடிப்புகளும், பாதிப்புகளும் ஒத்துப்போகும் நிலையில், மகாபாரத புராண கதையில் நடந்த போர் சிந்து சமவெளி பகுதியில் நடைப்பெற்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜூலை 16 1945ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் என்னும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்பட்டது. அதுதான் உலகத்தின் முதல் அணு ஆயுதமாக கருதப்படுகிறது.
அப்போது அந்த இடத்தில் பெரும் கதிர்வீச்சு தாக்கப்பட்டு பூமியில் பெரிய அளவிலான வெடிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுதும் அணு வெடிப்புகள் ஏற்பட்ட இடங்களில் கதிர்வீச்சு தாக்கத்தால் கற்களும், மணல்களும் கண்ணாடி போல் மாறின.
அதேபோன்று சிந்து சமவெளி பகுதிகளில் உள்ள மெகஞ்தாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களும் அணு வெடிப்பினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
மிகவும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்ட நகரத்தில் அணு ஆயுதம் அளவிற்கு சக்தி கொண்ட ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்பட்டதா? அல்லது மகாபாரதம் புராண கதையில் நடந்த போர் என்பதால், அது சிந்து சமவெளி பகுதியில் நடைப்பெற்றதா? என்று இந்தியர்கள் தங்களை அணு ஆயுதம் பயன்பாட்டில் முன்னிலைப்படுத்த இதுபோன்ற் கேள்விகளை எழுப்பி வருகின்றன.