Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பணத்துக்கும், அதிகாரத்திற்கும் மட்டுமே அரசியலில் இடம்: 16 வருட போராட்டத்தின் பலன் 100க்கும் குறைவான ஓட்டு!!


Sugapriya Prakash| Last Modified சனி, 11 மார்ச் 2017 (12:29 IST)
மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டார் ஐரோம் ஷர்மிளா. 

 
 
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் ஐரோம் ஷர்மிளா.
 
பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.
 
அதன்படி, மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் ஐபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
 
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா, 100க்கும் குறைவான வாக்குகளை பெற்று, டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.
 
இது குறித்து கூறிய ஐரோம் ஷர்மிளா, பண பலமும் அதிகார பலமும் தன்னை வீழ்த்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :