வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:02 IST)

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்…ரூ.60 லட்சம் பறிமுதல்…4 பேர் கைது!

ஐதராபாத் நகரில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். இதில்,  4 பேரைக் கைது செய்து ரூ.60 லட்சம் கைப்பற்றியுளனர்.
 

ஐபிஎல்-2023- 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் மோதி வருகின்றனர்.

இந்தப் போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்,  இன்று  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் போட்டியில், சன்ரைஸ் ஐதராபாத் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு வரும் நிலையில், அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாக போலீஸாருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். இதில், இன்றைய போட்டி தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதைக்  கண்டுபிடித்தனர்.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் தப்பியோடிய  நிலையில், 4 பேரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது