1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:33 IST)

டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமானம் கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் கடந்த சில மாதங்களாக ஒரு சில சிறப்பு விமானங்கள் மட்டுமே சில நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்க இருப்பதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இதனால் இந்திய விமான பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இருக்காது என்று கூறப்படுகிறது