வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (09:10 IST)

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பல்! – இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Vikrant
முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட போர்க்கப்பலான விக்ராந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்தியா ராணுவத்திற்கான போர்க்கப்பல்களை முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன், ராணுவ அமைச்சகம் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது.

அதன் பிறகு 10 ஆண்டுகளாக கப்பல் கட்டும் பணிகள் நடந்து வந்தது. பின்னர் 4 கட்டங்களாக போர்க்கப்பல் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. இன்று இந்த போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 76 சதவீதம் பொருட்களும் உள்நாட்டு தயாரிப்புகளே! இந்த கப்பைல் இருந்து 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்க முடியும். இந்த விக்ராந்த் கப்பல் இந்திய கடற்படைக்கும் மேலும் பலம் கூட்டுவதாக அமைந்துள்ளது.