வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (19:46 IST)

இந்திய ஆசிரியருக்கு உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் பரிசு!

இந்திய ஆசிரியருக்கு உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் பரிசு!
உலகின் தலை சிறந்த ஆசிரியருக்கான பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய ஆசிரியர் ஒருவருக்கு அந்த பரிசு கிடைத்துள்ளது அனைத்து இந்திய ஆசிரியருக்கும் பெருமை உடையதாக உள்ளது
 
உலகின் தலை சிறந்த ஆசிரியருக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. உலகின் சிறந்த ஆசிரியர்கள் என பத்து பேர் பட்டியலிடப்பட்ட் நிலையில் அந்த பத்து பேரில் சிறந்தவர் என  இந்திய ஆசிரியரான ரஞ்சித்சிங் விஷாலே என்பவர் தேர்வு செய்யப்பட்டார்
 
இந்த பரிசை வென்ற அவருக்கு ரூபாய் 7.3 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பரிசு தொகை முழுவதையும் தானே வைத்துக்கொள்ளாமல் இதில் 50 சதவீத தொகையை மீதமுள்ள 9 ஆசிரியர்களுக்கு பங்கேற்று தருவதாக ரஞ்சித்சிங் விஷாலே அறிவித்துள்ளார் 
 
உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இருந்த பத்து பேர்களில் இந்திய ஆசிரியர் சிறந்த ஆசிரியராக ரஞ்சித்சிங் விஷாலே தேர்வு செய்யப்பட்டிருப்பது அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது