1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (10:55 IST)

83க்கும் அதிகமானது இந்திய ரூபாயின் மதிப்பு: தொடர்ந்து வலுவாகும் டாலர்!

dollar
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வரலாறு காணாத அளவில் முதல் முறையாக 83  ரூபாய்க்கும் அதிகமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 என இருந்த நிலையில் நான்கு ஆண்டுகளில் 20 ரூபாய் வீழ்ச்சி அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.03 என வீழ்ச்சி அடைந்துள்ளதால் பலர் கவலை அடைந்தனர் 
 
அமெரிக்க டாலர் வலுவாகி வருவதன் காரணமாகவே இந்திய ரூபாய் உள்பட பல்வேறு நாட்டு நாணயங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இறக்குமதியாளர்களுக்கு கடும் நஷ்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva