Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமைச்சர் செல்லூர் ராஜூ பாணியில் ரயில்வே துறை

Sellur Raju
Last Updated: புதன், 6 டிசம்பர் 2017 (14:22 IST)
கோவை - பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டத்தின்போது ரயில் பெட்டிகள் நடைமேடையில் உரசுகிறதா என்பதை அறிய தெர்மாகோல் ஒட்டப்பட்டது.

 
கோவை - பெங்களூர் இடையேயான டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது. முதற்கட்ட சோதனை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது கட்ட சோதனை நடைபெற்றது. 
 
சோதனையின்போது மக்கள் பயணிப்பது போல அதற்கு ஏற்ப எடைக்கொண்ட தண்ணீர் கேன்கள் ஏற்றப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும் ரயில் எப்படி இயங்குகிறது என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டது. குறிப்பாக நடைமேடையில் ரயில் பெட்டிகள் உரசுகிறதா என்பதை கண்டறிய ரயில் பெட்டிகளின் இருபுறமும் தெர்மாகோல் ஒட்டப்பட்டது.
 
வைகை நதியில் அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மாகோல் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறையும் அமைச்சர் செல்லூர் ராஜூ பாணியை கடைப்பிடித்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :