திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (07:46 IST)

சீன செயலிகளுக்கு தடை: பூனைக்கு மணி கட்டிய இந்தியா!

டிக் டாக், யூசி பிரௌசர், ஷேர்இட் உள்பட பல செயலிகளுக்கு அமெரிக்கா உள்பட பல முன்னணி நாடுகளே தடை விதிக்க தயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்தியா சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி காட்டி உள்ளது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது 
 
குறிப்பாக டிக்டாக் செயலிகளை உபயோகிப்பவர்கள் அவர்கள் மொபைலில் உள்ள ரகசியங்கள் திருடப்படுவதாகவும், மொபைலில் உள்ள பல டெக்னாலஜி அம்சங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்படுவதாகவும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த செயலியை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்து வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதனை செய்ய தயக்கம் காட்டி வந்தன
 
இந்த நிலையில் அதிரடியாக இந்திய டிக்டாக் உட்பட சீனாவின் 59 செயலிகளுக்கு தடைவிதித்து பூனைக்கு மணி கட்டியது மட்டுமின்றி, இந்தியாவுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை சீனாவுக்கு தெரிவிக்கவே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தது போலவே சீனா எல்லையில் மோதியதற்கு பதிலடியாக டெக்னால்ஜிரீதியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்துள்ளதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியம் அடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
டிக்டாக் உள்ளிட்ட பல செயலிகளுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயனாளிகளாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இந்தியாவுடன் மோதும் நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை உலக நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்தியா இந்த அதிரடியை எடுத்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் சீனா இந்தியாவுடன் இனி மோதுவதற்கு யோசிக்கும் என்றே கூறப்படுகிறது