வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (12:12 IST)

இந்திய எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க நவீன கருவி

இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நவீன எக்ஸ்ரே கருவி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளின் கருத்தரங்கம், எஸ்எஸ்பி துணை ராணுவப் படையின் தலைவர் பி.டி.சர்மா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
 
அந்க் கூட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, 1,751 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-நேபாள எல்லையிலும், 699 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்திய-பூடான் எல்லையிலும் கண்காணிப்பைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கண்காணிப்பிற்காக, நவீன எக்ஸ்ரே கருவிகள் வாங்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.