திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (17:46 IST)

பஞ்சாப் எல்லையில் பறந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படையினர்!

drone
பஞ்சாப் எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் திடீரென ஆளில்லா விமானம் ஒன்று பறந்து வந்தது
 
இதனை அடுத்து அந்த விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியதாகவும் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் சில பாலிதீன் பொருட்கள் இருப்பதாகவும் அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran