கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு ரூ. 75 கோடி நன்கொடை வழங்கிய இந்தியர்
அமெரிக்கா வாழ் இந்தியர் மணி பாவ்மிக். மேற்கு வங்கத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர், கடும் உழைப்பால் விஞ்ஞானியானார்.
லேசர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். லேசர் கண் அறுவைச் சிகிச்சையில் இவரது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு சுமார் 75 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இப்பல்கலைக் கழகத்துக்கு இதுவரை கிடைத்த நன்கொடைகளிலேயே இதுதான் மிக அதிகம் என்றும், இந்த தொகை மூலம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் மணி எல் பாவ்மிக் கோட்பாட்டு இயற்பியல் ஆய்வு மையம், உலகின் முன்னணி ஆய்வு மையமாக இருக்கும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.