திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (15:45 IST)

மலிவான நாடுகளின் பட்டியல்: இந்தியா முதலிடம்

உலகில் வாழ்வதற்கு மிக மலிவான, செலவு குறைந்த நாடுகளின் பட்டியலை சர்வதேச பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.


 

 
சர்வதேச பொருளாதார புலனாய்வு பிரிவு அண்மையில் உணவு, வாழ்வாதார செலவு, கழிப்பிட வசதிகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகளிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது.
 
இந்த ஆய்வு 50 நாடுகளிடையே நடத்தப்பட்டது. ஆய்வு அறிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இந்தியாவை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் நேபாள், பாகிஸ்தான், துனிசியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.