செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (08:43 IST)

2 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

ஹெலினா, துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. 

 
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே ஹெலினா, துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  இந்த 2 அதிநவீன ஏவுகணைகள் எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.