வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (08:00 IST)

வெற்றியுடன் முடிவடைந்தது இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்று வந்த இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவுபெற்றது.


 
 
இந்தியா - இலங்கை ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் 29-ம் தேதி  மித்ரா சக்தி  2015"  என்ற பெயரில் தொடங்கியது. 
 
கடந்த 14 நாட்களாக நடைபெற்ற இந்த பயிற்சியின் இறுதி நாளான நேற்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ கமாண்டர் ஆசிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை இந்திய ராணுவ பிரிகேடியர் தபான் லால்ஷா, மற்றும் இலங்கை ராணுவ அதிகாரி அருணா ஜெயசேகரா  ஆகியோர் பார்வையிட்டனர்.
 
இந்த கூட்டுப் பயிற்சியில், எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத நடவடிக்கைகளை கண்டறிதல், போர் தந்திரங்கள் உள்பட பல்வேறு பயிற்சிகள் இரு தரப்பு ராணுவ வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.