வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (15:21 IST)

உலகளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம்

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


 

 
தற்கொலை செய்துக்கொள்வதற்கு முக்கிய காரணம் மன ஆழுத்தம். இன்று இந்த நவீன உலகத்தில் மன அழுத்தத்துக்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் இளைஞர்கள் இந்த மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி பருவம் முதல் அலுவலகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் வரை பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
 
மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
இந்தியா போல் நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2௦15 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
உலகளவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 
2015 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2005 முதல் 2015 வரை உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.   
 
உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.