வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (11:20 IST)

இந்தியாவின் பெயரை பாரத் என மற்ற கோரி மனு: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனுவில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு  நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பாத்வால் இது குறித்து உச்ச நீதிமன்றதில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாட்டுக்கு பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த் பாரத்பூமி அல்லது பாரத்வர்ஷ் என்ற வகையில் பெயரிட வேண்டும் என்பது அரசியல் நிர்ணைய சபையின் முதன்மையான பரிந்துரையாக இருந்தது. எனவே மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்தியா என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோரியிருந்தார்.
 
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல் தத்து நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் பொது நல மனு தொடர்பாக மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் யூனியன் பிரேதேசங்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.