செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (08:13 IST)

இந்தியா – சீனா போர் பதற்றம்; ராணுவத்திற்கு 500 கோடி சிறப்பு நிதி!

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் போர் பதற்றம் எழுந்துள்ள சூழலில் பதிலடி தர இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிர்பலிகள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்திய ராணுவம் மீது சீனா அத்துமீறி தாக்கியதற்கு இந்தியா முழுவதும் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சீன படைகள் மீண்டும் ஊடுறுவினால் பதலடி தரவும் இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லையில் தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்படுத்திக் கொள்ள அனுமதி உள்ள நிலையில் சிறப்பு நிதியாக ரூ.500 கோடையை இந்த எல்லை பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் சீனா மீண்டும் இந்திய எல்லையில் ஊடுருவினால் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை இந்தியா மறைமுகமாக உணர்த்தியுள்ளது.