வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (15:54 IST)

ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டு கொண்ட முதல் நபர் இவர்தான்!

ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டு கொண்ட முதல் நபர் இவர்தான்!
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்த நிலையில் இந்த தடுப்பூசியை முதல் நபராக கஸ்டமர் பார்ம சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் தீபக் போட்டுக்கொண்டார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் ஜூலை மாதம் இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 
 
91.60% செயல்திறனை இந்த தடுப்பூசி கொண்டது என்றும் இந்தியாவில் இந்த தடுப்பூசி தயாரிக்கும் தடுப்பூசி தயாரித்தவுடன் இதன் விலை அதிகபட்சமாக குறையும் என்றும் தற்போது இதன் விலை ரூ.995.40 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிந்ததே