1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (12:49 IST)

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் ஏழு கட்டங்கள் ஆக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் ஆகியவற்றில் பிசியாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், உத்தவ் தேவ் சிவசேனா அணி 21 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இன்னொரு அணி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran