வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:33 IST)

இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு எப்போது? ஜெயராம் ரமேஷ் தகவல்..!

இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு எப்போது என்பது குறித்த தகவலை  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு பக்கம் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு தாமதமாக ஆனாலும் நாங்கள் மாநில அளவில் உள்ள சிறிய கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. அதனால்தான் தொகுதி பங்குகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. 
 
இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்னும் ஒரு சில தினங்களில் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகியற்றோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் தொகுதி பங்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva