1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (08:19 IST)

மிஸ்டுகால் மூலம் சிலிண்டர்: இண்டேன் தரும் புதிய வசதி!

இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதி மிஸ்டு கால் மூலம் தொடங்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் அவர் இந்த வசதியை தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இண்டேன் சிலிண்டர் பதிவு செய்வதற்கு ஏற்கனவே புதிய மொபைல் எண் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தந்தாலே போதும் உடனடியாக சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பாக இந்த வசதி கிராமத்தில் இருப்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாகன எஞ்சின் திறனை அதிகரிக்க பயன்படும் எக்ஸ்பி 100 என்ற மேம்படுத்தப்பட்ட ஆக்டேன் பெட்ரோல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார் என்பதும் டெல்லி உள்பட ஏற்கனவே 10 நகரங்களில் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போது சென்னை உள்பட ஏழு நகரங்களில் இந்த வசதியை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மிஸ்டு கால் மூலம் இந்தியன் சிலிண்டர் எரிவாயு பதிவு செய்யும் வசதிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது